தமிழகம்

தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் டி.என்.சேஷன் – முதலமைச்சர் புகழாரம்

சென்னை

தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் டி.என்.சேஷன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டி.என். சேஷன் உடல் நலக்குறைவால் 10.11.2019 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர்.சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுளள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.