வேலூர்

தேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…

வேலூர்:-

தேர்தல் வந்து விட்டாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் தான் உளறுவார் என்று நடிகை விந்தியா கூறினார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஜி. சம்பத் ஆகியோரை ஆதரித்து பனப்பாக்கம், காவேரிபாக்கம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் நடிகை விந்தியா நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஏழை எளியவர்கள் நன்றாக இருக்கவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும். கழக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சி தான். சேது சமுத்திரத் திட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பணம் கொள்ளை அடித்து ஊழல் ஆட்சி செய்த கட்சி திமுக.

தேர்தல் வந்தாலே ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விடும். அவர் என்ன பேசுவார் என்பது அவருக்கே. துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் எந்த நாட்களில் வரும், எந்த தேதிகளில் வருவது என்பது அவருக்கே தெரியாது. ஜன கன மன தேசிய கீதத்தை அவர் நாட்டுப்புறப்பாடல் என்று மேடையில் பேசுகிறார். ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

தமிழக மக்கள் அம்மாவிற்கு தான் ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கினார்கள். எடப்பாடி எப்படி முதல்வராக முடியும் என்று கேள்வி கேட்கிறார் ஸ்டாலின். நான் ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கிறேன்.1967-ல் நடைபெற்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணாவிற்கு தான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் 1969-ல் கருணாநிதி எப்படி முதல்வரானார். எந்த தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றார்.ஆகவே எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானதை பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் தான் கருணாநிதி முதல்வரானார்.

அம்மாவின் கனவை நனவாக்க வருகின்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஜி.சம்பத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.

பிரச்சாரத்தின்போது காவேரிப்பாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் ஆர்.வி.மஞ்சுநாதன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆ.கோ.அண்ணாமலை, முன்னாள் நகர செயலாளர் ஆர்.டி.பாரதி, முன்னாள் கவுன்சிலர் முரளி, தா.ச.கண்ணன், கூட்டுறவு சங்க தலைவர் முனுசாமி, சங்கநாதன், பழனி, கூட்டணி நிர்வாகிகள் நந்தன் சதீஷ்குமார், வெங்கடேசன், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.