தற்போதைய செய்திகள்

தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்துகிறார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு…

கோவை:-

தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி ஆலந்துறை, மத்வராயபுரம், குளத்துப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளரச்்சி மற்றம் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மத்வராயபுரம், சென்னனூர், குளத்துப்பாளையம், குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 918 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 1567 மாணவ, மாணவிகளுக்கு வினா- விடை புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தையும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையுடன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஓதுக்கீடு செய்து தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

கோவை மாவட்ட ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கனவினை நனவாக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற இலவச பயிற்சி மையம் ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுவதுடன், உயர்ந்த பதவிகளை பெற்று மாநிலத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.