தற்போதைய செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

விருதுநகர்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்களில் இப்போது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும். கமல்ஹாசன் நான் அரசியல்வாதி என்று அவர் சொல்லக்கூடாது.

மக்கள் தான் அவர் அரசியல்வாதி என்று சொல்ல வேண்டும். அந்த பக்குவத்திற்கு முதலில் அவர் வரட்டும். ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியில் சிறந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதை அவர் பெருமைப்பட வேண்டும்.திமுக ஆட்சியில் பட்டப்பகலில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் காவல்ஆய்வாளர் வெற்றிவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழக அரசை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

இ்வ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.