திருவண்ணாமலை

நல்ல விஷயத்துக்கு தி.மு.க. என்றும் துணை போகாது – பெருமாள்நகர் கே.ராஜன் கடும் தாக்கு

திருவண்ணாமலை

நல்ல விஷயத்துக்கு தி.மு.க. என்றும் துணை போகாது என்று பெருமாள்நகர் கே.ராஜன் கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன் தலைமை தாங்கி 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் பலத்தோடு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று வரலாறு படைக்கும். இந்த மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றுவேன். திருவண்ணாமலை நகராட்சியை மீண்டும் அதிமுக தன்வசப்படுத்தும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக 20 மணிநேரம் உழைத்தவர்.

அம்மா என்ற பெயரை சொன்னாலே அனைவரின் முகத்திலும் புன்னகை மலரும். அதிமுகவில் தொண்டர்கள் ஆணிவேராக உள்ளனர். அதிமுகவில் உள்ள தொண்டர்கள் எதிர்பார்ப்பு இல்லாதாவர்கள். தொண்டர்கள் பலத்தால்தான் மருத்துவனையில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் எம்.ஜி.ஆர்.. அதிமுகவில் தொண்டர்களே தலைவர்கள்.

தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கியதும், வழங்கி கொண்டிருப்பதும் கழக ஆட்சிதான். கரும்பு வயலில் காலணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஸ்டாலின். தமிழக முதல்வராகலாம் என்று ஸ்டாலின் கனவு வேண்டுமானால் காணலாம். முதல்வர் சீட்டுக்கு ராசியில்லாதவர் ஸ்டாலின். திமுக என்றைக்குமே நல்ல விஷயத்திற்கு துணை போனதில்லை. தற்போது ஸ்டாலின் இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்கிறார். திமுக என்றைக்குமே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. 2021 லும் கழக ஆட்சிதான் அமையும் என்பது தாய்மார்களின் உணர்வு. தமிழகத்தில் தொடர்ந்து கழக ஆட்சிதான் இருக்கும். தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை எவராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது

இவ்வாறு பெருமாள்நகர் கே.ராஜன் பேசினார்.