தற்போதைய செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் கழகம் நிச்சயம் வெற்றி பெறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை…

மதுரை:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் கழகம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தல்லாகுளம் பகுதியில் செயல்பட்டு வந்த நூலக கட்டடத்தில் படிப்பவர்களின் வசதிக்காக கூடுதல் கட்டடம் வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சட்டமன்ற உறுப்பின்ர் வி.வி.ராஜன்செல்லப்பாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் நூலக கட்டடம் கட்டப்பட்டது. இந்த நூலக கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் துணைமேயர் கு.திரவியம், செயற்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் ராமன், ஒச்சாத்தேவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புதூர் அபுதாகீர், மகாதேவன் உதவி ஆணையாளர் பழனிசாமி, செயற் பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர் சோனை உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி, செயலாற்றி வருகின்றனர்.தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், அம்மாவின் வழியில் முதலமைச்சர் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். திமுகவினர் அராஜகம், அவதூறு பிரச்சாரங்கள், செய்து கொணடு வருகின்றனர். இது போன்ற தீயசெயல்களை நாங்கள் ஒரு போதும் செய்தது கிடையாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை போல் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

விரைவில் வருகின்ற உள்ளாட்சித்தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வகுத்து கொடுக்கும் தேர்தல் வியூகங்களை பின்பற்றி சிறப்பாக பணியாற்றி மதுரை மாநகரில் 100 சதவிகிதம் வெற்றியை பெற கழக நிர்வாகிகள் பாடுபடுவோம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.