இந்தியா மற்றவை

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்தை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

மறைந்த பாஜக மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு காலமானார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டி வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் இன்று திறக்கப்பட்டது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, வாஜ்பாயின் முழு உருவப்படத்தை குடியரசு துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.