தூத்துக்குடி

நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. சூளுரை…

தூத்துக்குடி :-

நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பாடுபடுவோம் என்று கழக அமைப்பு செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. சூளுரைத்தார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ்.வி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்து மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி சாதனை படைத்தார். எவருக்கும் அஞ்சாமல் முடிவெடுக்கும் தன்மை படைத்த அவர் தமிழகத்தில் ஏழை, மாணவ, மாணவிகளின் பசியை போக்க சத்துணவு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். அவரது வழியை பின்பற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், விலையில்லா சீருடை, பள்ளிக்கு சென்று வர விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ரேசன் கடைகளில் 20 கிலோ விலையில்லா அரிசி, பெண்கள் கஷ்டப்படாமல் சமையல் செய்திட விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்பட அத்தனையும் வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்க பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்களின் நிலை அறிந்து அதை போக்கிட ஒரு பவுன் தாலிக்கு தங்கம் ரொக்கமாக ரூ.50,000 வழங்கினார். தற்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்களுடைய சீரிய வழியை பின்பற்றி கழகத்தின் தூய தொண்டர்களாக விளங்கிவரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் அம்மாவின் நல்லாட்சியை மக்களுக்கு தந்து வருகிறார்கள்.

தமிழகமே வியக்கும் வகையில் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்கினார்கள். முதல்வரின் அதிரடி மக்கள் நலத்திட்டத்தினை கண்டு எதிர்க்கட்சியினர் நிலைகுலைந்து போய் விட்டனர். இதனால் கழக அரசின் மீதும், முதலமைச்சர் மீதும் வீண்பழி சுமத்தி வருகின்றனர்.

விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக தி.மு.க.வின் கனிமொழி கூறி வருகிறார். ஏற்கனவே ஊழலில் சிக்கிய இவருக்கு ஓட்டு போட்டுவிட்டு எங்கே போய் தேடுவது. தமிழகத்திற்கு நல்லாட்சி தரக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும், அம்மாவின் நல்லாட்சியையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்கி சாதனை படைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு தான் இனி என்றும் தமிழகத்தை ஆளும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.