இந்தியா மற்றவை

நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடக்கும் -தேர்தல் ஆணையம்…

புதுடெல்லி
2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தயாரான நிலையில் எல்லையில் பதட்டமான நிலை நேரிட்டது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் இந்தியா பதிலடி தாக்குதல், பாகிஸ்தான் அத்துமீறல் காரணமாக எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இதனால் தேர்தல் சரியான நேரத்தில் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் ஆணையமும் இதனை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பதட்டத்திற்கு இடையே தேர்தல் தேதி விபரம் தொடர்பான கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்கையில் “தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும்,” என்று கூறினார்.