சேலம்

நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றிபெற வேண்டி சேலம் சன்னியாசி குண்டு தர்காவில் கழகத்தினர் சிறப்பு பிரார்த்தனை…

சேலம்:-

நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற வேண்டி சேலம் சன்னியாசிகுண்டு தர்காவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கழகத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கட்சியும், ஆட்சியும் பல ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் நடந்திட வேண்டியும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத் தேர்தலில் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன் தலைமையில், சேலம் புறநகர் மாவட்டம், சேலம் சன்னியாசிகுண்டு ஹஜ்ரத் பீருல் ஹாதி பாவா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்த சிறப்பு பிரார்த்தனையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே. செல்வராஜ், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் நெத்திமேடு முத்து, சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சுப்ரமணியம், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேப்பேரி ராஜேந்திரன், 52-வது வட்ட கழகச் செயலாளர் ராமசுப்ரமணியம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை வட்ட செயலாளர் சகாயம், மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.டி. மணி, சேலம் அப்துல் ரஷீது, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஜெ. வெங்கடேசன், தர்கா முத்தவல்லி ஹாஜி பாதுஷா மொய்தீன், ஹஜ்ரத் நவாஸ்கான், ஜெ. அப்துல் சலாம், தர்பான் எஸ். சுல்தான், உதவியாளர் அப்துல் காதர், தூத்துக்குடி ஜான்சன் மற்றும் ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.