சிறப்பு செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் – மாவட்ட கழக செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை…

சென்னை

மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தரைல முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இது குறித்து தலைமை கழக செய்திக்குறிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழகத்தில்  மாலை தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டதன் விபரங்கள் குறித்தும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.