இந்தியா மற்றவை

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை…

புதுடெல்லி:-

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது. 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ந்தேதி தொடங்கி, மே 19ந்தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 483 தொகுதிகளில் 66.88 சதவீத வாக்கு பதிவானது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டீகாரில் 1 என மொத்தம் 59 தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.மொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

இத்துடன் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடக்கிறது.