உலகச்செய்திகள்

நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது…

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித்ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து விஜய் மல்லையா தரப்பில் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது. இது விஜய் மல்லையாவிற்கு பின்னடைவாகும். மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர பணியாற்றும் இந்திய அதிகாரிகளுக்கு நேர்மறையான நகர்வாகும்.இருப்பினும், மல்லையா அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. விசாரணையில் தொய்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.