இந்தியா மற்றவை

நாடு மேலும் முன்னேற்றம் பெற பாஜக ஆட்சி மீண்டும் வேண்டும் – பிரதமர் மோடி…

லஞ்ச ஊழலிலும், வாரிசு அரசியலில் காங்கிரஸ் கட்சி சிக்கித் தவிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார். நாடு மேலும் முன்னேற்றம் பெற பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலுக்காக 300-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

இந்த வரிசையில் அவர் ஒடிசா மாநிலம் காலகண்டி மாவட்டத்தில் உள்ள பவானி பட்டினம், பீகார் மாநிலம் ஜாமுய், கயா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஏழைகளை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதுகின்றன என்றார். ஏழைகளை வறுமையிலிருந்து விடுவிக்க அந்த கட்சிகள் எதையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஏழைகளை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதுகின்றன என்றார். ஏழைகளை வறுமையிலிருந்து விடுவிக்க அந்த கட்சிகள் எதையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டில் பழங்குடிகள் நலத்திட்டங்களுக்கு 30 சதவிகிதம் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.பழங்குடியின மக்களின் கைவினை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற அவர், குறைந்த பட்ச ஆதார விலை பட்டியலில் இதுவரை 10 பயிர்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது கூடுதலாக 40 பயிர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.

நாட்டில் பல லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது என்ற அவர், பல லட்சம் வீடுகளுக்கு முதல் முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.பல லட்சம் மகளிர் இப்போது எரிவாயு இணைப்பை பெற்றுள்ளதாக கூறிய அவர், பல கோடி பேர் வங்கி கணக்குகளை பெற்றுள்ளனர் என்றார்.நாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றங்களுக்கு பாரதிய ஜனதாவுக்கு மக்கள் அளித்த வாக்குகளே காரணம் என மோடி தெரிவித்தார்.

லஞ்ச, ஊழலிலும், வாரிசு அரசியலிலும் சிக்கிக் கிடக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளை விட்டு விட்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்கு அளித்ததால் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முன்னேற்றத்தை கண்டு உள்ளதாக மோடி தெரிவித்தார்.நடைபெற உள்ள தேர்தலிலும் மக்கள் பா.ஜ.கவை ஆதரித்தால்,நாடு மேலும் முன்னேற்றத்தை காணுமென்றும் அவர் உறுதி அளித்தார்.