தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்மை தொகுதியாக தேனி தொகுதியை வென்றெடுப்போம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சபதம்…

மதுரை:-

நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று தேனி தொகுதியை முதன்மை தொகுதியாக வென்றெடுப்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டியில் கழக பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

அம்மா அவர்களால் கழக பணிக்கு அடையாளம் காட்டப்பட்ட ப.ரவீந்திரநாத்குமார், தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.இந்த தேனி நாடாளுமன்ற தொகுதியில் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் உள்ளடக்கி வருகிறது. தேனி தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், கழகம் முதன்மை வாக்குகளை பெற வேண்டும். ஒரு பூத்தில் கூட கழகம் வாக்கு முன்னிலை பெறவில்லை என்ற நிலை வரக்கூடாது.

முக்கியமாக பூத் கமிட்டி நிர்வாகிகள் தினந்தோறும் கழக அரசின் சாதனைகளையும், எதிர்கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரங்களையும் மக்களிடம் நீங்கள் எடுத்து கூற வேண்டும். அம்மாவின் அரசு, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. திட்டங்கள் இல்லாத வீடு கிடையாது. ஆகவே மக்கள் என்றைக்கும் நம்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர். ஆகவே வருகின்ற 18-ந்தேதி வரை கழக தொண்டர்கள் இரவு பகல் பாராது கழக வெற்றிக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும். இந்தியாவிலேயே உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை முன்னிலையில் வெற்றிபெற்ற ஒரே தொகுதி தேனி தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் அனைவரும் உருவாக்கிதந்து அந்த வெற்றிக்கனியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரிடம் நாம் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.நீதிபதி, கே.மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தவசி, ம.முத்துராமலிங்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், கே.முருகேசன், பிச்சைராஜன், ராஜா, நகர செயலாளர் பூமாராஜா, பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், அழகுராஜா, வாசிமலை, குமார், மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட அணி நிர்வாகிகள், திருப்பதி, வேலுச்சாமி, போத்திராஜா, கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.