ஈரோடு

நாட்டு மக்கள் பாதுகாப்புடன் வாழ மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் – அமைச்சர் கே.சி. கருப்பணன் பிரச்சாரம்…

ஈரோடு:-

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு(எ) ஜி.மணிமாறனை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

ஈரோடு நாடாளுமன்ற கழக வேட்பாளர் வெங்கு(எ) ஜி.மணிமாறனை ஆதரித்து ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சூரியம்பாளையம் பகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையிலும், சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் கே.சி.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. 67 வகையான நலத்திட்டங்கள் அம்மா ஆட்சியில் வழங்கப்படுகிறது.

ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பான இந்தியாவில் வாழ வலிமையான பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பாரத பிரதமராக வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறி வருகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கழக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் சூரியம்பாளையம் பகுதி அவைத்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.பழனிசாமி, கண்ணுப்பையன் (எ) கிருஷ்ணராஜ், ஈரோடு குணசேகரன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் என்.நந்தகோபால், விஜயா, தனலட்சுமி, ராதா, குளம் ஆறுமுகம், தாமோதரன், ஆர்.ஜி.கார்த்திக், குமார், தமிழரசன், முருகன், ஆனந்தன், சம்பத் குமார் உள்பட கூட்டணி கட்சியினர் மற்றும் கழகத்தினர்திரளாக கலந்து கொண்டனர்.