சிறப்பு செய்திகள்

நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…

சென்னை, 

கழகத்தின் கொள்கைகளையும், அம்மாவின் லட்சியங்களையும் மக்களிடையே விளக்கிடும் வகையில் நியூஸ் ஜெ தொலைக் காட்சி லோகோ அறிமுக விழா சென்னையில் நாளை (12-09-2018) மாலை நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று லோகோவை அறிமுகம் செய்து வைக்கின்றனர். கழகத்தின் கொள்கைகளையும், அம்மாவின் லட்சியங்களையும் மக்களிடம் விளக்கிடும் வகையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படவுள்ளது. இந்த தொலைக்காட்சி, செய்தி சேனல், பொழுது போக்கு சேனல், இசை சேனல் என 3 பிரிவுகளில் தொடங்கப்படவுள்ளது. நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா  (12-ம்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச் சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோவை அறிமுகம் செய்து வைக்கின்றனர். மேலும் இணையதளம் மற்றும் செயலியை தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர்.

நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேனலை Google play மற்றும் App store-ல் பதிவிறக்கம் செய்து www.facebook.com/newsjtamil, www.twitter.com/newsjtamil. www.instagram.com/newsjtamil என்ற இணையதளத்தில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.