இந்தியா மற்றவை

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு – குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி

புதுடெல்லி

நிர்பயா பலாத்்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதையடுத்து குற்றவாளிகள் அக்சய்குமாரின் தூக்கு தண்டனை குறித்து மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூசன், ஏ.எஸ்.கோபன்னா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது அக்சய் குமார் தரப்பில் ஏ.பி.சிங் ஆஜரானார். அவர் இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் புதிய உண்மைகள் உள்ளன. எனது கட்சிக்காரர் அக்சய்குமார் ஊடகம் ,ெபாதுமக்கள், அரசியல் அழுத்தம் காரணமாக அவர் குற்றவாளியாக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான அம்ரீந்தர் பாண்டேவிடம் நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதில் ஆதாரங்களும், அவர் கூறிய கருத்துக்களும் இந்த வழக்கில் நம்பும்படியாக இல்லை. இந்த வழக்கில் என் கட்சிக்காரர் ஒரு அப்பாவி. அவர் ஒரு ஏழை. இறந்த மாணவி நிர்பயா முதன்முறையாக அளித்த மரண வாக்குமூலத்தில் எந்த குற்றவாளிகளின் பெயரையும் கூற முடியவில்லை. அவர் இறப்புக்கு காரணம் ரத்தத்தில் விஷம் கலந்தது, அதிக அளவுக்கு மருந்துகளை உட்கொண்டது என சொல்லப்படுகிறது. எனவே அவரது வாக்குமூலத்திலேயே சந்தேகம் இருக்கிறது. யாரோ சொல்லிக் கொடுத்து அவர் தவறான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணாக முன்வந்து எதையும் கூறவில்லை. மேலும் அக்சய்குமாரின் பெயரை அவர் கூறவே இல்லை. அவர் தவறாக இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டார். இந்த நிலையில் அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்டு முடித்த உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. குற்றவாளிகள் 4 பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.