கரூர்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் செந்தில்பாலாஜி – என்.ஆர்.சிவபதி குற்றச்சாட்டு…

கரூர்:-

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி என கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி குற்றம் சாட்டினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி அரவக்குறிச்சி பேரூராட்சி 177-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகர், சின்னக்கவுண்டனூர், மேலத்தலையூர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நோக்கங்களையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியங்களையும் அவர்களின் வழியில் சிறப்பான முறையில் நிறைவேற்றி வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சிக்கு மக்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை கண்டு அச்சத்தின் உச்சத்திற்கு சென்று தலைமைப்பண்பு சிறிதுமின்றி தரமற்ற வார்த்தைகளால் கழக அரசை விமர்சித்து வருவதுடன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டி காத்த மாபெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிதைக்க நினைக்கும் டி.டி.வி.தினகரனுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

எதையும் சீர்தூக்கி பார்த்து தீர்ப்பு வழங்கும் பழக்கமுடைய அரவக்குறிச்சி தொகுதி மக்களாகிய நீங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தீயசக்தி என்று நமக்கெல்லாம் அடையானம் காட்டிய தி.மு.கவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பச்சோந்தியான செந்தில்பாலாஜி தான் வெற்றிபெற்றால் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 செண்ட் நிலம் கொடுப்பேன் என பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை சொல்லி உங்களை ஏமாற்றி உங்கள் வாக்குகளை பெற நினைக்கும் அவருக்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் வழங்க வேண்டும்.

அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு மற்றும் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்திடவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்திடவும், வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைத்துக்கொடுத்திடவும், அம்மா உணவகங்கள் அமைத்திடவும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

பொங்கலுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கிய கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும், விவசாயிகளின், கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், தேர்தல் முடிந்தவுடன் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திடவும், வறுக்மைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் ரூ.2000 பெற்றிடவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கழகத்தின் வெற்றி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு உணர்ந்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்திவரும், மேலும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ள ஏழைகளின் தோழன் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்ய வேண்டுகிறேன்.

தன் குடும்ப நலனை தவிர தமிழக மக்களின் நலன் குறித்து சிறிதும் சிந்தித்துக்கூட பார்க்காத தி.மு.கவிற்கு இனி எக்காலத்திலும் வெற்றி கிடைக்கப்போவதில்லை என்பதனை உணர்த்தும் வகையில் இத்தேர்தல் அமைய அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி பேசினார்.