இந்தியா மற்றவை

நிறை புத்தரிசி பூஜை – சபரிமலை கோயிலில் 7-ந்தேதி நடை திறப்பு…

திருவனந்தபுரம்:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்று வருகிறது. அப்போது, விளைந்த நெற்கதிர்களை கோவில் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை 6-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் நிறைபுத்தரிசி பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.