இந்தியா மற்றவை

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை – இஸ்ரோ தலைவர்..

சென்னை:-

இஸ்ரோ தலைவர் கே.சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் செயல்படுத்தப்படவேண்டும்.

75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.