தமிழகம்

நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – சென்னை வானிலை மையம்…

சென்னை:-
சென்னைக்கு வட கிழக்கே வங்கக் கடல் பகுதியில் இன்று காலை சரியாக 7:02 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். வெறும் 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.