திருநெல்வேலி

நெல்லையில் மனோஜ் பாண்டியனுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு…

திருநெல்வேலி

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நெல்லையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நெல்லை வருகை தந்த அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா, கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், முத்து கருப்பன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பிரபாகரன், எம்.எல்.ஏ மனோகரன், மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அரிஹர சிவசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், முன்னாள் கூட்டுறவு பேரங்காடி தலைவர் பள்ளிகோட்டை செல்லத்துரை, உறுப்பினர் சின்ன துரை, பகுதி செயலாளர்கள் ஜெனி, மாதவன், மோகன், டவுண் சந்திரசேகர், பாளை மஸ்தான், மாவட்ட சிறுபான்மை செயலாளர் மகபுப்ஜான், ஹெயாத், ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து வேட்பாளர் மனோஜ் பாண்டியன் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புரட்சிதலைவி திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து முத்து ராமலிங்க தேவர் சிலை, பேரறிஞர் அண்ணா சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலை, காமராஜர் சிலை, திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் சிலை, வ.உ.சி சிலை மற்றும் வீரன் சுந்தரலிங்கம் சிலை, வீரன் அழகுமுத்து சிலை, தந்தை பெரியார் சிலை, வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலை, ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.