தற்போதைய செய்திகள்

நெல்லை சீமை பாசக்கோட்டை அம்மாவின் எஃகு கோட்டை : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி முழக்கம்

திருநெல்வேலி,

நெல்லை சீமை பாசக்கோட்டை. அம்மாவின் எஃகு கோட்டை என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

நெல்லை சீமை பாசக்கோட்டை. இது புரட்சித்தலைவியின் எஃகு கோட்டை என்பது வரலாறு. ஒரு சமயம் காரில் புரட்சித்தலைவர் செல்லும்போது வயலில் வேலை பார்த்த விவசாயிகள் தங்கள் பாதம் எங்கள் வயலில் பட வேண்டும் என்று வேண்டினார்கள். அதனை ஏற்று புரட்சித்தலைவர் வயலில் காலை வைத்தார். அப்போது இனிமேல் இது பொன்விளையும் பூமியாக அமோக விளைச்சல் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள். அமெரிக்கவில் இருந்து தமிழகத்தின் ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றவர். இன்றும் என்றும் அம்மாவின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும். வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் நெல்லை மாவட்டம் அம்மாவின் எஃகு கோட்டை என்பதை நிரூபித்து காட்டுவோம்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் மோகன் ஹையாத்து, ஜெனி, கல்லூர் வேலாயுதம், கேபிள் சுப்பையா, கபாலி, வாஸ்து தளவாய், காந்திமதி, நாதன், சீதா முருகன், எஸ்.எம்.எஸ்.ஜாலி, தங்க பிச்சையா, ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.