திருநெல்வேலி

நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…

திருநெல்வேலி:-

திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் 21 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து கூட்டுறவு தனி அதிகாரியும் தேர்தல் அதிகாரியுமான ராஜனிடம் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தச்சை கணேச ராஜா பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தச்சை கணேசராஜா கூறுகையில், என்னை தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதி வழங்கி வெற்றிபெற செய்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்துக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன். வங்கியின் வளர்ச்சி பணிக்கு மிகவும் பாடுபடுவேன் என்றார்.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கும், இயக்குநர்களுக்கும், கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், கழக மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட பேரவைச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிஹரசிவசங்கர், பகுதிச் செயலாளர் ஜெனி, மோகன், மேலநீலிதிநல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா, ஒன்றியச் செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், கங்கைமுருகன், வேல்முருகன், சங்கரபாண்டியன், மற்றும் இளமதி, சிந்து முருகன், வெண்ணிலா ஜீவபாரதி, முத்துலெட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வி, மற்றும் கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.