தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் அணையிலிருந்து கால்வாய்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளரிடம் பேசியதாவது:-

முதலமைச்சரின் ஆணையின்படி 21.09.2019 அன்று முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து கோடை மேலழகியன் கால்வாய், தெற்கு கோடை மேலழகியன் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடன் கால்வாய் போன்ற கால்வாய்களுக்கு நேற்று முன்தினம் முதல் 09.09.2019 வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24090 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள வாழை பயிர்கள் மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். 21.09.2019 வரை 1000 மில்லியன் கன அடி நீர்இருப்பு மற்றும் தேவைக்கேற்ப்ப தண்ணீர் திறந்து விடப்படும். விவசாய பெரு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலான்மை மேற்கொண்டு அதிக மகசூல் அடைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளார்கள் தங்கராஜ், பழனிவேல் உதவி பொறியாளர் மகேஸ்வரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன் முக்கிய பிரமுகர்கள் அரிகர சிவசங்கர், செவ்வல் முத்துசாமி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.