தமிழகம்

பட்ஜெட் கூட்டுத்தொடர் 14-ந்தேதி வரை நடைபெறும் – பேரவை தலைவர் தனபால் பேட்டி…

சென்னை:-

வரும் 14 ந்தேதி வரை பேரவை கூட்டம் நடைபெறும் என்று பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து பேரவை தலைவர்ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூடம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பேரவை தலைவர் ப.தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நாளை பேரவைக் கூட்டம் இல்லை. 10-ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை. 11-ம் தேதி திங்கட்கிழமை சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள் வாசிக்கப்படும். அதனைத் தொடர்ந்து 2019-20
ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்மீது பொது விவாதம் தொடங்கும். 12-ம் தேதி 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்மீது பொது விவாதம் நடைபெறும். 13 ந்தேதி மூன்றாம் நாளாக 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறும்.

அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவார்கள். 14-ந்தேதி 2019-20 ஆம் ஆண்டின் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைமுன்வைத்தல். 2018-19 ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையைப் பேரவைக்கு அளித்தல். 2018-19 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி).

2018-19 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கக் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி).2019-20 ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)2019-20 ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி). நிதி நிலை அறிக்கை பொது விவாதம் மீது துணை முதல்வர் பதிலுரை அளிப்பார்.

சட்டமுன்வடிவு இருந்தால் எடுத்துக்கொள்ளப்படும். வழக்கம்போல் காலை 10 மணிக்குப் பேரவை கூட்டம் தொடங்கும். எல்லா நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு என்றார்.தொடர்ந்து ஒசூர் சட்டமன்ற தொகுதி குறித்த கேள்விக்குபதில் அளித்த பேரவை தலைவர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக்கு இதுவரை வரவில்லை. வந்தவுடன் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அது செய்யப்படும் என்று பதில் அளித்தார்.