தற்போதைய செய்திகள்

பணியின் போது உயிரிழந்த மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் குடும்பத்துக்கு ரூ. 14 லட்சம் நிதியுதவி

சென்னை:-

பணியின்போது உயிரிழந்த பணியாளர் குடும்பத்துக்கு ரூ.14 லடசம் நிதி உதவியை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் வழங்கினார்.

மாநகர் போக்குவரத்து கழகத்தில் பூந்தமல்லி பணிமனையில், கடந்த 06.08.2019 அன்று, இரவு பேருந்து பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இ.வெங்கடேசன் (56), எதிர்பாராமல் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த முதுநிலை தொழில்நுட்ப பணியாளர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், வருங்கால வைப்புநிதித் தொகை ரூ.6.24 லட்சம், பணிக் கொடை தொகை ரூ.5.42 லட்சம் மற்றும் குடும்ப நலநிதித் தொகை ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.14.66 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கோ.கணேசன் நேற்று பல்லவன் இல்லத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிதி அலுவலர் ச.கண்ணன் ஆகியோர் உடன் இருந்தார்.