தூத்துக்குடி

பண்டாரவிளையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி, பண்டாரவிளையில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி மாணவர்கள் சார்பில் நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் முனைவர் சுகந்தா தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வசந்தி வரவேற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. நாட்டு நலத்திட்ட முகாமினை துவங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஸ்ரீவை குண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுக நயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.