இந்தியா மற்றவை

“பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்” – மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் உறுதி…

புதுடெல்லி
நாடாளுமன்ற வளாக நூலக கட்டடத்தில் எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்
சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், அகமது படேல், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சரத்பவார், சரத்யாதவ், திருச்சி சிவா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,  இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாயமான விமானியை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம். ராணுவ நடவடிக்கையை ஆளும் தரப்பு அரசியலாக்ககூடாது என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்றன.
அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி,
இந்திய விமானி மாயமானது வருத்தமளிக்கிறது, விரைவில் நாடு திரும்புவார் என நம்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பு படைகளுக்கு துணை நிற்போம் என்றார்.