இந்தியா மற்றவை

பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானங்கள் பயிற்சியின்போது மோதி விபத்து…

பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் சாகசப் பயிற்சியின் போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

ஏரோ இந்தியா எனப்படும் ஆசியாவிலேயே, மிகப்பெரிய விமானக் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 12வது ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் நாளை தொடங்கி, ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் 136 நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கண்காட்சியையொட்டி, எலஹங்கா விமானப்படை தளத்தில் விமானங்கள் வானில் சாகச பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தன.

இந்தநிலையில், விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமான படைக்கு சொந்தமான சூரியகிரண் பிரிவை சேர்ந்த 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விமான விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும், விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.