இந்தியா மற்றவை

பாஜக தேர்தல் அறிக்கை, மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது -பிரதமர் மோடி…

புதுடெல்லி:-

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை  பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

48 பக்கங்கள் அடங்கிய பாரதீய ஜனதா  தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

* நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.

* 2024-க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்.

* முத்ரா கடன் திட்டம் மூலம் 17 கோடி தொழில்முனைவோர்  பலனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 30 கோடியாக உயர்த்தப்படும்.

* கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்.

* ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை  என கூறப்பட்டு உள்ளது.

*  விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* “அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்”.

தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி கூறும்போது, மக்கள் பிரச்சினைகளை  அறிந்து சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

வெளிப்படையான அரசுக்கு உதாரணமாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது என அமித்ஷா கூறினார்