இந்தியா மற்றவை

பானி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் பானி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.கடந்த 3-ஆம் தேதி பானி புயல் பூரி நகர் அருகே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கல் சாய்ந்தன.புயல் காரணமாக ஒடிசாவின் 14 மாவட்டங்களில் ஒரு கோடியே 64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களும், பகுதி சேதம் அடைந்தவர்களுக்கும் நிரந்தரவீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நவீன்பட்நாயக் தெரிவித்துள்ளார்.