தற்போதைய செய்திகள்

பாமக போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

மக்களவை தேர்தலில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளானர்.

முதல்கட்ட வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தருமபுரியில் அன்புமணி ராமதாசும், விழுப்புரத்தில் வடிவேல் ராவணனும், கடலூரில் ரா. கோவிந்தசாமியும் போட்டியிடுகின்றனர். அரக்கோணத்தில் ஏ.கே. மூர்த்தியும், மத்திய சென்னையில் முனைவர் சாம் பாலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம், திண்டுக்கல்லில் ஜோதிமுத்துவும் போட்டியிடுகின்றனர்.