தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி பற்றி விமர்சனம் – மன்னிப்பு கேட்டார் ராகுல்காந்தி…

புதுடெல்லி:-

பிரதமர் மோடி பற்றி அவதூறாக விமர்சனம் செய்ததற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டு காவலாளி என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி எம்.பி. மீனாட்சி என்பவர் உச்சநீதிமன்றத்தில் அவதூறு செய்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி 22-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் மோடியை திருடன் சென்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது தாம் அவ்வாறு தவறாக பேசி விட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ராகுல்காந்தி தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.