திருநெல்வேலி

பிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…

திருநெல்வேலி:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த பிளாஸ்டிக் ஒழிப்பை கடைபிடிக்கும் வகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை டக்கம்மாள்புரத்தில் உள்ள டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையில் மண்பானையில் குடிநீர் வைத்து அந்த குடிநீரை திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவரும், பள்ளி தாளாளருமான கபரியல் தேவா மாணவிகளுக்கு வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடன் நடைபெற்று வரும் கழக அரசின் மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. மக்களின் உயிரை காக்கவும் கேன்சர் நோய் ஏற்படாத வண்ணம் தடுக்கவும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பிளாஸ்டிக்கை ஒழித்ததை வரவேற்கிறோம். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை வரவேற்கிறேன்.

தென்தமிழகத்தில் முதன்முதலாக எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு வகுப்புகள் முடிந்தவுடன் குடிநீர் அருந்தவும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை மற்றும் நீர்கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது. எங்கள் பள்ளியில் வழங்கியது போல் மற்ற பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். மண்பானையில் நீர் வழங்கியதையும் குடிநீர் அருந்த நேரம் ஒதுக்கீடு செய்தததையும் பொதுமக்களும் ஆசிரியர்களும் வரவேற்றனர். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பேட்டியின் போது தலைமை ஆசிரியை உமா, ஆசிரியர் கோயில்ராஜ், ஆனந்த சாமுவேல், பிரபு டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.