சிவகங்கை

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆரம்பம்…

சிவகங்கை:-

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை நடைபெறும். இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை,அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். செப்டம்பர் 1-ந்தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 2-ந்தேதி) மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பக்தர்கள் கொழுக்கட்டை படையல் வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.