இந்தியா மற்றவை

பீகாரில் கோடை வெயிலுக்கு பலி எண்ணிக்கை 184-ஆக உயர்வு…

பீகார்:-

பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே உள்ளது. இதே போல பீகார் மாநிலத்திலும் கடந்த இரு நாட்களாக பகல் நேர வெப்பநிலை அளவு கடந்து உயர்ந்துள்ளது. இதனால் இரு நாட்களில் மட்டும் 113 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 36 பேரும், கயா மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கடும் வெயிலை அடுத்த பீகார் மாநிலம் முழுவதும் பள்ளிகளை 22-ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.