திருப்பூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கொலுசு பரிசு : திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு

திருப்பூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கொலுசு பரிசாக வழங்க திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

திருப்பூரில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், அவைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை குறை சொல்ல யாராலும் முடியாது. முதலசை்சர் அம்மா அவர்களின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்திருக்கிறார். மார்ச் 14-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் வர இருக்கிறார். அனைவரும் அந்த விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அவிநாசி அத்திக்கடவு திட்டம் இன்று சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

ரூ.900 கோடியில் நான்காவது குடிநீர் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூரில் ரூ.900 கோடியில் 6 கி.மீ., தூரத்துக்கு பாலம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் ஏராளமான திட்டங்களை முதல்வர் தந்து உள்ளார். வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை நாம் பெற வேண்டும். அதற்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 10 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதியில் அம்மா அவர்களின் படம் திறக்கப்பட்டு அன்னதானம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 10 இடங்களில் அன்னதானம் நடைபெறும். அன்று மாலை அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கொலுசு, தங்க மோதிரம் வழங்கப்படும். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

இக்கூட்டத்தில், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கே.என்.சுப்பிரமணியம், அமுள் கந்தசாமி, பட்டுலிங்கம், ஏ.எஸ்.கண்ணன், கணேஷ், புத்தரச்சல் பாபு, அம்பாள் பழனிசாமி, உஷா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் சாமிநாதன், சங்கீதா சந்திரசேகர், தண்ணீர்பந்தல் தனபால், எஸ்.பி.என்.பழனிசாமி, சிவாசலம், சீனியம்மாள், யு.எஸ்.பழனிசாமி, நீதிராஜன், ரத்தினகுமார், ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.