பெரம்பலூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவி : பெரம்பலூர் மாவட்ட கழகம் முடிவு…

பெரம்பலூர்:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்க பெரம்பலூர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71- வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட அவைத்தலைவர் இரா.துரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கொடிக்கம்பத்தில் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடி ஒரு முன்னோட்டமாக திகழ வேண்டும். ஏழை எளிய அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பயன் பெரும் வகையில் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச் செல்வன் பேசினார்.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை மாவட்ட முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, அ.இ.அ.தி.மு.கழகத்தின் தலைமையில் அமைந்த வெற்றி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.