இந்தியா மற்றவை

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – பிரதமர் மோடி பாராட்டு…

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த (2018) ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் 1400 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, உலகளாவிய அளவில் அதிகமாகவும், பாதுகாப்பாகவும் புலிகள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலகளாவிய அளவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என 9 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த கால இலக்குக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே இதை நாம் சாதித்து விட்டோம்.

புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசுடன் இணைந்து செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் மக்களுக்கு அதிகமான வீடுகளை கட்டுவதுடன் வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களும் அதிகமாக அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.