இந்தியா மற்றவை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி அறிவிப்பு…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் மத்திய அரசு வழங்கும் 35 லட்ச ரூபாய் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்துகள் பணிக்காக தொகை 21,50,000, வீரதீர செயல்களுக்கான நிதி 15,00,000, காப்பீடு 30,00,000 ஆகியவற்றை சேர்த்து 1 கோடியே 1லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.