இந்தியா மற்றவை

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடக்கம்…

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்கி, 24-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

விமான கண்காட்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானவர்கள் வருவார்கள் என்பதால், பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரபேல் போர் விமானம் மற்றும்  ‘டசால்ட் பால்கான் 2000எஸ்’ வகையை சேர்ந்த வணிக விமானம் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இதையொட்டி, விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.