தற்போதைய செய்திகள்

பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் அப் எண் : சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை காவல்துறையில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தனியாக செயல்படுகிறது. இந்த பிரிவின் பெண் போலீஸ் அதிகாரியாக துணை கமிஷனர் ஜெயலட்சுமி செயல்படுகிறார். சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இதற்கான அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புகார் செய்ய சென்னை காவல்துறையில் புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல்துறை அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்து செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது. பொதுமக்களின் பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தன்மையை உணர்ந்த கீழ்கண்ட வசதிகளை பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

இது அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் செய்யலாம். www.facebook.com chennai police. decwc chennai@gmail.com என்ற இ மெயிலிலும் புகார் செய்யலாம். துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு, ஆயிரம் விளக்கு என்ற முகவரியிலும் தபாலிலும் புகாரை அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.