கோவை

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே அரசு கழக அரசு – கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ பேச்சு…

கோவை:-

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே அரசு கழக அரசு என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பில் விளாங்குறிச்சியில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கழக அவைத் தலைவரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வீ.சி.ஆறுக்குட்டி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ, கழக வர்த்தக அணி மாநில தலைவர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பா.வே.தாமோதரன், கழக செய்தி தொடர்பாளர் மகேஸ்வரி, கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சிங்கை வசந்தி, லீலாவதி உண்ணி, ரங்கராஜ், கோவை பாரதி, எஸ்.ஆர்.அர்ஜுனன், கார்த்திகேயன், ராஜேந்திரன், குபேந்திரன், ரகுபதி சாமி, ரவி, கே.கே சக்திவேல், சுப்பிரமணி, வனிதாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ பேசியதாவது;-

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்பது நமது கழகத்தால் மட்டுமே முடியும். அம்மாவின் கருணை பார்வை எப்போதும் பெண்களின் மீது இருக்கும். அதனால் தான் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் தாலிக்குத் தங்கம், படித்த பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் ரூபாய் 25 ஆயிரம், பட்டதாரி பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம், 4 கிராம் தங்க தாலி, பின்னர் 8 கிராம் ஒருபுறம் தங்கத்தாலி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

புரட்சித் தலைவி அம்மாவின் திட்டங்கள் இன்று ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்கும். எனவே தான் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு அம்மா வழியில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. கழக அரசு பொங்கலுக்கு ரூபாய் 1000 வழங்கியது. இன்று பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 6000 போட்டு உள்ளதையும், முதல்வர் சென்னையில் துவக்கி வைத்துள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கி இருக்கிறார். இப்படி திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பாதுகாவலனாக கழக அரசு இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் கழகம் அமோக வெற்றிபெற அ.தி.மு.க.வுக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்கு என்றும் கழக அரசு துணை நிற்கும்,

இவ்வாறு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ பேசினார்.

முடிவில் வேலுசாமி நன்றி கூறினார்.