தற்போதைய செய்திகள்

பெண்சிசு கொலையை ஒழித்து நாட்டுக்கே வழி காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா – அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம்

விழுப்புரம்:-

பெண் சிசு கொலையை ஒழித்து நாட்டுக்கே வழிகாட்டியவர் புரட்சித்தலைவி அம்மா என்று அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூட்டினார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒலக்கூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்மலர் தயாளன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை ஒழித்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். குழந்தைகளுக்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக அம்மா ஆற்றிய சேவையை நினைவு கூரும் வகையில் அம்மா பிறந்த நாளை பிப்ரவரி 24 -ந் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களையும், மகளிரையும் சார்ந்தே இருக்கும்.

திமுக ஆட்சியாளர்கள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறுவார்கள். ஆனால் ஆட்சியில் இருக்கும் போது தன் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். அம்மா அவர்கள் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், முன்னாள் ஒன்றிய சேர்மன்களான பன்னீர், கிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் அன்பழகன், கழக நிர்வாகிகள் ஜெயபாலன், ராமச்சந்திரன், ஜெகஜோதி, பொன்னுரங்கம், குட்டி, கண்ணன், பாரதி, சரவணன் உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.