பெரம்பலூர்

பெரம்பலூரில் கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி தீவிர வாக்குசேகரிப்பு…

பெரம்பலூர்:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம், மாவிலிங்கை, தொட்டியப் பட்டி, தேனூர் ,நத்தக்காடு, கண்ணாப்பாடி, டி. களத்தூர், எலந்தல்பட்டி, அடைக்கப்பட்டி, நக்க சேலம், புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி,சிறுவயலூர், விரலிப்பட்டி, குரூர், மங்குன் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

இந்த பிரசாரத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மாணவரணி செயலாளருமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், பா.ஜ.க மாநில தேர்தல் குழு பொறுப்பாளர் சிவசுப்ரமணியம், பா.ம.க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை. காமராஜ், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் வெள்ளையன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்,புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் பாலாஜி தேவேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் குணா.பண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை சுப்ரமணியன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எசனை பன்னீர்செல்வம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வடிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லப்பன், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் செந்தில், இளைஞர் பாசறை துணை செயலாளர் அசோகன்,கொங்கு இளைஞர் பேரவை மோகன்ராஜ், அம்மா பேரவை செயலாளர் நகர் ராஜா, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் டோமினிக், மாவட்ட மாணவரணி பொருளாளர் பூபாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் மதுபாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.