பெரம்பலூர்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்…

பெரம்பலூர்:-

பெரம்பலூரில் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதை ராஜா, சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-

நிச்சயம் இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் கொண்டு வரும் திட்டத்தினை முதலில் நிறைவேற்றித் தருவேன். எனது 30 ஆண்டு கால அரசியல் பணியில் தூய்மையாக இருந்துள்ளேன். யாரையும் பழி வாங்கும் செயலை செய்தது கிடையாது. ஆக என்னை எந்த நேரமும் தொடர்பு கொண்டு உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன், பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில் குமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வெள்ளையன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளரை வரவேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் துரை, பொருளாளர் செழியன், மாவட்ட இணை செயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள், ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி வரவேற்றார். தே.மு.தி.க. நகர செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.