சென்னை

பெரம்பூரில் கழக வேட்பாளர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு…

சென்னை:-

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மூலக்கடை 35-வது கிழக்கு வட்டத்தில் கழக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நேற்று காமராஜர் சாலையில் வீதி,வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.

அப்போது வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், அம்மாவின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டுகளில் எதிர்கட்சியான தி.மு.க.வும் சரி, கந்துவட்டி, கட்ட பஞ்சாயத்து செய்து வந்த செயல்படாத சில ஆட்களாலும் சரி தொகுதிக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை.

பெரம்பூர் தொகுதியில் என்னை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற வைத்தால் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து புதிய திட்டங்களை நிறைவேற்றி தங்களுக்காக ஒரு ராணுவ வீரனாக செயல்பட்டு பெரம்பூர் தொகுதியை இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

அதனைத்தொடந்து அவர் ஜி.ஆர்.மண்டபம் சாலை, காமராஜர் சாலை, அம்பேத்கர் தெரு, கருணாநிதி தெரு, கொடுங்கையூர் காலனி, முத்தமிழ் நகர் 7-பிளாக், உள்ளடங்கிய பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

இதில் மாவட்ட பேரவை செயலாளர் ஏ.டேவிட்ஞானசேகரன், பி.ஜே.பாஸ்கர், எஸ்.சைலேஷ், ஜி.வினோத்குமார், எம்.மோகன், என்.ரமேஷ், ஜெஸ்டின் பிரேம்குமார், வழக்கறிஞர் ஏ.வினாயகமூர்த்தி, முகேஷ், கரண், கிரண்குமார், டேனி, சசி, ராஜேஷ் கண்ணன், உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.