தற்போதைய செய்திகள்

பெருந்துறை ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு…

ஈரோடு:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பெருந்துறையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கழக அம்மா பேரவை இணை செயலாளர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ஆகியோர் பெருந்துறை ஒன்றியத்திற்குப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். குடி மராமத்து திட்டம் கொண்டு வந்து ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டதால் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. அவிநாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறத. கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. வலிமையான பாரதம் உருவாக நரேந்திர மோடி மீண்டும் பாரத பிரதமராக வேண்டும்.

ஸ்டாலின் கூறி வரும் பொய் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. கல்வித் துறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள், விலையில்லா சீருடைகள், மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கழக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கே.வி.மணிமேகலை, பெருந்துறை நிலவள வங்கி தலைவர் கே.ஆர்.சேனாபதி, கே.ஆர். கருப்புசாமி, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன்,வரப்பாளையம் பெரியசாமி, அர்ஜூனன், ரவி, மோகனசுந்தரம், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணி, திங்களூர் என்.கே.பழனிசாமி, அருளானந்தம், செங்கோடு, பெத்தாம்பாளையம் சண்முகம், பழனிசாமி, சிவக்குமார், மணி, கே.சி.சண்முகம், குருசாமி, அப்பு (எ) லோகநாதன், சுலோச்சனா, ராஜி, ஈ.ஆர்.செந்தில்குமார் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.